TAMIL
இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 4 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் – கங்குலி தகவல்
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் மற்றொரு
முன்னணி அணி பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை ‘சூப்பர் சீரிஸ்’ என்ற பெயரில் (ஒரு நாள் அல்லது 20 ஓவர் போட்டி) ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். முதலாவது சூப்பர் சீரிஸ் தொடர் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும்’ என்றார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசித்து நெருக்கடி அளித்து வரும் நிலையில், அதற்கு எதிர்நிலைப்பாடாக இந்த போட்டித் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் கையில் எடுத்துள்ளது.