TAMIL
இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தல்
கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்(3 ரன்கள்), ஆரோன் பிஞ்ச்(19 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 117 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அவரது நிலையான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்க வலுவான தொடக்கம் அமைந்தது.
இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் ஸ்மித் 4000 ரன்களை கடந்தார்.