TAMIL

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.


இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 110-வது ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை நடந்த 109 போட்டிகளில் இந்திய அணி 55 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 48 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் டை ஆனது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை. மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கேப்டன் கோலி கூறும்பொழுது, முதலில் பேட்டிங் செய்வதில் எந்த சங்கடமும் இல்லை.


அதிக ரன்களை குவித்து சவால் ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

கடந்த இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக கடுமையான போட்டியை எங்களுடைய அணி ஏற்படுத்தியது என பெருமைப்பட கூறினார்.

இதேபோன்று நியூசிலாந்தில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.

போட்டிக்கான அணிகள் விவரம்:

இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.


நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், டிம் சவுதி, கைல் ஜாமிசன், மிட்செல் சான்ட்னெர், ஹாமிஷ் பென்னட்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker