TAMIL
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இதுபற்றி பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்ய விரும்பினோம். மிக்க மகிழ்ச்சி.
இது வறண்ட மேற்பரப்புடன் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு முடிவு அதிக ஆச்சரியம் தருகிறது.
முதலில் பேட்டிங் செய்வது எங்களுடைய பலம் ஆகும். இந்த போட்டியில் மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவில்லை என கூறியுள்ளார்.