CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்தொடர்- ஆஸ்திரேலிய அணியில் ஆண்ட்ரூடை தேர்வு
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் கானேரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக 33 வயதான ஆண்ட்ரூடை ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் 7 ஒருநாள் போட்டி மற்றும் 26 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.