TAMIL
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்காள தேசம் 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்
மூன்று 20 ஓவர் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்தது. 20 ஓவர் தொடரை ரோஹித் சா்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணியின் புதிய கேப்டன் மொமிநுல் ஹக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்து வீசியதால் ரன் எடுக்க முடியாமல் வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். தொடக்க வீரர்கள் இம்ருல் கைஸும், இஸ்லாமும் தலா 6 ரன்கள் எடுத்து உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா பந்துவீச்சுகளில் ஆட்டமிழந்தார்கள். அதையடுத்து முகம்மது மிதுன் முகமது ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேச அணி 26 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது முஷ்பிகுர் ரஹீம்14 ரன்கள் மற்றும் மொமினுல் ஹக் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
தொடர்ந்து விளையாடிய வங்காள தேச் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்து உள்ளது.