TAMIL

இணையத்தில் தீயாக பரவிய அக்தரின் வீடியோ… வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தான் அணியில் நடந்த அநியாயம்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தான் அனுபவித்த பிரசினை தொடர்பாக வாக்குமூலம் அளித்ததற்காக வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில், கனேரியா இந்துவாக இருந்ததால் வீரர்கள் அவருடன் சக வீரர்கள் உணவு சாப்பிட மறுத்துவிட்டதாக கூறியிருந்தார்.



பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 39 வயதான கனேரியா, அனில் தல்பத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த இரண்டாவது இந்து ஆவார்.

இந்நிலையில், அக்தர் கூறியது உண்மைதான் என்றும் அத்தகைய துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவருக்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாக கனேரியா கூறியுள்ளார்.

அக்தர் எனக்கு ஆதரவுக்கு வந்த போதிலும் நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை, அதைப் பற்றி பேச தைரியம் இல்லை.

நான் ஒரு இந்துவாக இருந்ததால் என்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயர்களை விரைவில் வெளிப்படுத்துவேன்.



இது தொடர்பாக பேச எனக்கு தைரியம் இல்லை, ஆனால் இப்போது அக்தர் பேசியதை நான் கேட்ட பிறகு இந்த விஷயத்தில் பேச தைரியம் கிடைத்தது என்று கனேரியா கூறினார்.

மேலும், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக், முகமது யூசுப், மற்றும் அக்தர் போன்ற வீரர்கள் அவரது மதத்தைப் பொருட்படுத்தாமல் தன்னுடம் நல்லபடியாக பழகியதாக கனேரியா கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker