IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
இட்லி ‘வடா பாவ்’-ஐ மீண்டும் வென்று விட்டது: சென்னை வெற்றி குறித்து சேவாக் கருத்து

ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆரம்ப போட்டியே பரபரப்பாகவும், விறுப்பாகவும் சென்றது. முதல் போட்டியிலேயே ரசிகர்கள் சுண்டி இழுக்கப்பட்டனர்.
முதல் போட்டியே பரபரப்பாக சென்றுள்ளதால் இதுகுறித்து விரேந்தர் சேவாக் கூறியிருப்பதாவது:-
ஐ.பி.எல். போட்டிக்கு இது சிறந்த தொடக்கம். இந்த போட்டியை பார்க்கும்போது இத்தொடர் பட்டைய கிளப்பும் பட்டாசாக இருப்பது போல் தெரிகிறது. அம்பதி ராயுடு, டு பிளிஸ்சிஸ் சூப்பராக விளையாடினர், ஆனால், இறுதியில் சாம் கர்ரனின் கேமியோ மாறுபட்டதாக இருந்தது.
வடா பாவ்-ஐ மீண்டும் இட்லி வென்றது #CSKvMI
இவ்வாறு சேவாக் அதில் குறிப்பிட்டுள்ளார்.