TAMIL
இங்கிலாந்து மக்களின் கனவை நினைவாக்கிய பென் ஸ்டோக்சுக்கு விருது: உணர்ச்சிபூர்வமாக பேசிய மனைவி
இங்கிலாந்து மக்களின் கனவு நினைவாக முக்கிய காரணமாக இருந்த ஹீரோ பென் ஸ்டோக்ஸ் 2019-ஆம் ஆண்டிற்கான பிபிசி ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்னாலிட்டி ஆப் தி இயர் விருதை வென்றுள்ளார்.
கடந்த 1954-ஆம் ஆண்டில் இருந்து BBC Sports Personality of the Year-க்கான விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்வதற்கான வீரர்களின் பெயர் வெளியானது.
இதில் Lewis Hamilton(Racing driver), Dina Asher-Smith(Sprinter), Alun Wyn Jones(Rugby player), Raheem Sterling(Footballer), Katarina Johnson-Thompson(Athlete), Ben Stokes(Cricketer) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டிற்கான BBC Sports Personality of the Year-ன் 65-வது விருது வழங்கும் விழா ஞாயிற்றுக் கிழமை இரவு ஸ்காட்லாந்தின் Aberdeen-ல் இருக்கும் P&J Live அரங்கில் நடைபெற்றது.
அப்போது இந்த விருதிற்கான வெற்றியாளர் பென் ஸ்டோக்ஸ் என அறிவிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழாவிற்கு பென் ஸ்டோக்ஸ் தன் மனைவியுடன் வந்திருந்தார்.
இதை அறிவுத்தவுடன் மனைவியை முத்தம் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பென்ஸ்டோக்ஸ் அதன் பின் வந்து விருதினை பெற்றுக் கொண்டார்.
அதன் பின் அவர் கூறுகையில், முதலில், இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைவருக்கும் என்னுறைய வாழ்த்துக்கள்.
தனிநபர்களாக நீங்கள் எதைச் சமாளித்து, உங்கள் விளையாட்டுக்காகச் செய்தீர்களோ, அதுவே உங்களுக்கும் நல்லது.
இந்த இடத்தில் நிற்கும் போது பலருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட விருது தான் இருப்பினும், நான் ஒரு குழு விளையாட்டை விளையாடுகிறேன்.
அந்த அணியில் இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுடன் நீங்கள் சிறப்பு தருணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவர்களின்
முயற்சி இல்லாமல் நான் இந்த விருதைப் பெற மாட்டேன், அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
என் வாழ்க்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடினமாகவே இருந்தது என்று தான் சொல்வேன், அபோது என்னுடைய மேலாளரும்
நண்பருமான Neil Fairbrother தான் பெரிதும் உதவியாக இருந்தார் என்பதை இங்கு கூறுகிறேன் என்று கூறி முடித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஸ்டோக்சின் மனைவியான Clare Ratcliffe கூறுகையில், நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்,
உங்களுடைய மனைவி நான் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
இங்கிலாந்து மக்களின் 44 ஆண்டு கனவை ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவேற்றினார் என்றே கூற வேண்டும்.
என்ன தான் 11 பேர் கொண்ட அணியாக இருந்தாலும், இங்கிலாந்து அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த
பென்ஸ்டோக்ஸை அந்நாட்டு மக்கள் ஹீரோவாக பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What a night for Ben Stokes.
He was crowned BBC Sports Personality of the Year to top off an incredible 2019.
Catch up on all things #SPOTY here ? https://t.co/Gx41WWvyTa pic.twitter.com/iQSOUeQxut
— BBC Sport (@BBCSport) December 15, 2019