TAMIL
இங்கிலாந்து நட்சத்திர வீரர் உட்பட 4 வீரர்களுக்கு கொரோனா: டி20 பிளாஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றம்

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நடந்து கொண்டிருக்கும் டி20 பிளாஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
தனக்கும் தனது மனைவிக்கு கொரோனா உறுதியானதை வில்லி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். மேலும் தனக்கு வாழ்த்து மற்றும் ஆதரவு செய்தி அனுப்பி அனைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறிய வில்லி, உள்ளூர் தொடரான டி20 பிளாஸ்ட் தொடரில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட முடிவு செய்தார்.
30 வயதான யார்க்ஷயர் வைக்கிங்ஸ் அணிக்காக விளையாட ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை கூட நிராகரித்ததாகக் கூறினார்.
வில்லியுடன் தொடர்பிலிருந்த யார்க்ஷயர் துணை கேப்டன் டாம் கோஹ்லர்-கேட்மோர், ஜோஷ் போயஸ்டன் மற்றும் மேத்யூ ஃபிஷர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களும் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என யார்க்ஷயர் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Thank you for all the kind messages. My wife & I received positive COVID test results. Gutted to be missing the remaining games. Even more devastated that having been in contact with the other 3 lads Sat morning (before we had symptoms) means they’re at risk & unavailable too. https://t.co/mP1pZAiX1C
— David Willey (@david_willey) September 16, 2020