TAMIL

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லிஸ் மரணம்

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 31-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி.யை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 36-வது நிமிடத்தில் ஜூனான் அடித்தார். பெங்களூரு அணி 3 வெற்றி, 4 டிரா என்று 13 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி- கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.




* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லிஸ் புற்றுநோய் பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. வேகப்பந்து வீச்சாளரான பாப் வில்லிஸ் இங்கிலாந்து அணிக்காக 90 டெஸ்ட் விளையாடி 325 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 64 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றினார்.

* இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மிக்கி ஆர்தர் (வயது 51) நியமிக்கப்படுகிறார். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து விட்டதாகவும், அவரை 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார்.

* வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் தொடரில் ஆட உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே நேற்று அளித்த பேட்டியில், ‘ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்புவதற்குரிய வாய்ப்பாக இதை நான் பார்க்கவில்லை. எனக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி முடிந்த வரை மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். எனது பணி, தேசத்திற்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது தான். ஆல்-ரவுண்டராக இருப்பது எப்போதும் கடினம். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் சோபிக்க வேண்டியது அவசியம். அதை விட முக்கியம், உடல்தகுதி விஷயத்தில் தொடர்ந்து மேம்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.’என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker