CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்- இவர்கள்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்- இவர்கள்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்

இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி, இந்திய அணியை பழி தீர்க்க காத்துக்கொண்டிருக்கிறது. பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என்று தெரிகிறது. 
 
இந்த நிலையில், மெய்நிகர் முறையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-  ஒருநாள் போட்டியை பொருத்தவரையில் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும்தான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள். 
ரோகித் சர்மா- ஷிகர் தவான்
ஒருவீரர் கடுமையான சூழலை எதிர்கொள்ளும்போது அவரை எப்படி கையாள்வது என்பது அணியில் எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து நல்ல மனநிலையிலேயே வைத்திருப்போம்” என்றார். 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker