CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. ஒருநாள் போட்டிக்கான அணியில் முதுகு வலியால் அவதிப்படும் நவ்தீப் சைனிக்கு பதிலாக டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நிலையில், தற்போது அவர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.