CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்டில் கேப்டன் பதவியில் ரகானே எப்படி செயல்படுவார்? தெண்டுல்கர் பதில்
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய பயணத்தில் பாதியில் நாடு திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் அவர் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு இந்தியா வருகிறார்.
இதன் காரணமாக எஞ்சிய 3 டெஸ்டிலும் விராட் கோலி விளையாட மாட்டார். அவர் ஆடாமல் போவது இந்திய அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டிலும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரகானே ஏற்பார். அவர் தற்போது டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். பயிற்சி ஆட்டத்தில் அவர் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டார்.
இந்த நிலையில் கேப்டன் பொறுப்பில் ரகானேயின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரகானே மதிநுட்பம் உள்ள சமநிலையில் இருக் கும் கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் அணியை வழிநடத்தி இதற்கு முன்பு பார்த்துள்ளேன். ரகானே ஆக்ரோஷமானவராக இருந்தாலும், அதை கட்டுப்படுத்த தெரிந்தவர்.
நான் அவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செயல்படுத்துபவர்.
நிச்சயமாக ரகானே இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு தனிநபரை சார்ந்தது அல்ல. அது 11 பேரின் கூட்டு முயற்சி.இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையை கொண்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் கடந்த முறையை விட தற்போது அனுபவம் வாய்ந்ததாக உள்ளது.