CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூணான ஸ்மித்தை 1 ரன்னில் சாய்த்த அஸ்வின்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
அதன்பின் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் ரன்கள் அடிக்க திணறினார். அவர் 29 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் தூண் எனக் கருதப்படும் ஸ்மித்தை ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற்றியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது. மேலும், ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக கடைசி 21 இன்னிங்சில் ஐந்து ரன்களுக்கு கீழே அவுட் ஆனது கிடையாது. தற்போது இந்த டெஸ்டில் ஆட்டமிழந்துள்ளார். அஸ்வின் பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற ரஹானேயிடம் கேட்ச் கொடுத்தார். இதன் மூலம் அஸ்வின் – ராஹேனே ஜோடி 3-வது முறையாக ஸ்மித்தை வீழ்த்தியுள்ளது.
ஸ்மித் வெளியேற்றியதுடன் டிராவிஸ், கேமரூன் கிரீன் ஆகியோரையும் வெளியேற்றி ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை ஆட்டங்காண வைத்தார் அஸ்வின்.