இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆஸ்திரேலியா விமான போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் எல்லைகளை மூடும் நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி சொந்த நாடு புறப்பட்டனர்.
இதில் ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தனர். சொந்த காரணத்திற்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்காட் குகெலெஜின்-ஐ ரிச்சர்ட்சனுக்கு மாற்று வீரராக அணியில் சேர்த்துள்ளது.
குகெலெஜின் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக உள்ளார். தற்போது அவரும் பயோ-பபுள் வளையத்திற்குள்தால் இருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் பயோ-பபுள் வளையத்தில் இருந்து ஆர்ச்சி பயோ-பபுள் வளையத்திற்குள் வந்துள்ளார். வருவதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் முடிவு வந்ததாக ஆர்சிபி அணி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணியில் நியூசிலாந்தை சேர்ந்த கைல் ஜேமிசன் தொடர்ந்து ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.