CRICKETLATEST UPDATESNEWSTAMIL
அபு தாபி டி10 லீக்: கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ விளையாடுகிறார்கள்
டெஸ்ட் போட்டி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக சுருங்கி புது வடிவம் பெற்றது. அது டி20 கிரிக்கெட் போட்டியாக மேலும் சுருங்கி 3-வது வடிவமாக உருவெடுத்தது. கிரிக்கெட்டில் மேலும் பரபரப்பை கூட்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியாக தற்போது மாறியுள்ளது.
அபு தாபியில் மூன்று முறை டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 4-வது சீசன் அடுத்த வருடம் ஜனவரி 28-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜயாத் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இந்தத் தொடரில் கிறிஸ் கெய்ல், ஷாஹித் அப்ரிடி, வெயின் பிராவோ ஆகியோர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ் கெய்ல் அபு தாபி அணிக்காகவும், வெயின் பிராவோ டெல்லி புல்ஸ் அணிக்காகவும், அந்த்ரே ரஸல் வடக்கு வாரியர்ஸ் அணிக்காகவும், சுனில் நரைன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாட இருக்கிறார்கள். இவர்கள் அந்தந்த அணியின் ஐகான் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சோயிப் மாலிக் மாரதா அரேபியன்ஸ் அணிக்காகவும், இலங்கையின் திசாரா பெரேரா புனே டேவில்ஸ் அணிக்காகவும், இசுரு உதானா பங்க்ளா டைகர்கள் அணிக்காகவும் விளையாட உள்ளனர்.