CRICKETLATEST UPDATESNEWSTAMIL
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் பார்த்திவ் படேல் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியில், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டவர் பார்திவ் படேல். 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பார்த்திவ் படேல், இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக 2018ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பார்த்திவ் படேல் அறிவித்துள்ளார். இத்தகவலை அவர் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக விளையாடுவதற்கு வந்தபோது, 17 வயது சிறுவனான தன் மீது பி.சி.சி.ஐ அதிக நம்பிக்கை வைத்தாக கூறிய பார்த்திவ் படேல், தன் இளம் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில், ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், வாய்ப்பு வழங்கியமைக்காகவும் பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கிரிக்கெட் பயணம் முழுவதிலும் தனக்கு ஆதரவாக இருந்த, சொந்த மாநில சங்கமான குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.