TAMIL
அனுஷ்கா சர்மாவிடம் 2 விஷயங்களை கற்றுக்கொண்டேன்: ரசிகர்களிடம் மனம் திறந்த விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.
டெலிவிஷன் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக இருவரும் சந்தித்த போது காதல் ஏற்பட்டது.
முதலில் மறைமுகமாக இருந்த இந்த காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது.
4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இந்த ஊரடங்கை கொண்டாடி வருகின்றனர்.
இவர்களின் கொண்டாட்டத்தை அறியும் வகையில் தினமும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு இடையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி மேற்கொண்ட நேரலை உரையாடலில், அனுஷ்காவை சந்திப்பதற்கு முன்னதாக தான் மிகவும் பொறுமையற்று இருந்ததாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுடன் நேரலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா உரையாடி தங்களது வாழ்க்கை, கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, தான் அமைதி மற்றும் பொறுமையை தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய விராட் கோலி, மாநில அளவில் தான் தேர்வு செய்யப்படாதபோது அன்றைய இரவு தான் அழுததாகவும் குறிப்பிட்டுள்ளார்.