CRICKETLATEST UPDATESNEWSTAMIL

அதிவேக ஒருநாள் கிரிக்கெட் சதம்: ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார் ஸ்மித்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் சதமும் முக்கிய காரணமாகும். ஸ்மித் 62 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார். இதற்கு முன் 2015-ல் மேக்ஸ்வெல் 51 பந்தில் இலங்கைக்கு எதிராக சதம் அடித்தார். இதுதான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனின் அதிவேக சதமாக உள்ளது. ஜேம்ஸ் பால்க்னர் 2013-ல் இந்தியாவுக்கு எதிராக 57 பந்தில் சதம் அடித்தார். இது 2-வது அதிவேக சதமாக உள்ளது. தற்போது ஸ்மித் 62 பந்தில் சதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

இந்த போட்டியில் ஸ்மித் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker