TAMIL

அதிரடியான சிக்சரில் தனது கார் கண்ணாடியை நொறுக்கிய அயர்லாந்து வீரர்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கெவின் ஓ பிரையன் உள்ளூரில் நேற்று முன்தினம் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 37 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த போட்டியின் போது கெவின் ஓ பிரையன் அதிரடியாக விளாசிய ஒரு சிக்சரில் பந்து மைதானத்துக்கு வெளியே போய் விழுந்தது.

அந்த பந்து மைதானத்தில் வாகன நிறுத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கெவின் ஓ பிரையனின் காரின் பின் பக்க கண்ணாடியை பதம் பார்த்தது.

இதில் கார் கண்ணாடி முழுமையாக உடைந்து நொறுங்கியது.

போட்டி முடிந்து தனது காரை எடுத்த போது நிலைமையை அறிந்த கெவின் ஓ பிரையன் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாலும்,

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமால் கண்ணாடி உடைந்த தன்னுடைய காரில் அமர்ந்தபடி உற்சாகமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை அயர்லாந்து கிரிக்கெட் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker