CRICKETLATEST UPDATESNEWSTAMIL
அணியிடம் இருந்து என்ன விரும்புகிறார் என்பதில் ரஹானே தெளிவாக இருப்பார்: இஷாந்த் சர்மா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி முதல் டெஸ்ட் முடிந்த பின்னர், மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்தியா திரும்பியுள்ளார். இதனால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ரஹானே கேப்டன் பதவி குறித்து இஷாந்த் சர்மா கூறுகையில் ‘‘ரஹானே மிகவும் அமைதியானவர், நம்பிக்கையுள்ளனர். அவர் பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்பதை நான் கூறுவேன்.
விராட் கோலி களத்தில் இல்லாமல் ரஹானே உடன் இணைந்து விளையாடும்போதெல்லாம், அவர் என்னிடம் எந்த மாதிரியான பீல்டிங்கை விரும்புகிறீர்கள்? எப்படி பந்து வீச விரும்புகிறீர்கள்? நீங்கள் பந்து வீச விரும்புகிறீர்களா? எனக் கேட்பார்.
அவர் பந்து விச்சாளர்களின் கேப்டன். அவர் மற்றவர்களை போன்று இதை செய்யுங்கள் எனச் சொல்லமாட்டார். அவருடைய அணியிடம் இருந்து அவர் என்ன விரும்புகிறார் என்பதில் தெளிவாக இருப்பார்’’ என்றார்.