FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL
அணிக்கு 07 பேர்; லிவர்பூல் புளூ அணி சம்பியன்

புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் நடாத்திய அதன் அங்கத்தவர்களுக்கிடையிலான அணிக்கு 07 பேர்களை கொண்ட இரண்டாம் கட்ட “உள்ளக வீரர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி தொடர் 2021” எனும் கால்பந்தாட்ட தொடரில் லிவர்பூல் “புளூ” அணியினர் சம்பியனாகியுள்ளனர். ரெட் அணியினர் இரண்டாமிடத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
இந்த போட்டித்தொடர் வெள்ளிக்கிழமை (05) மாலை புத்தளம் இபுனு பதூதா வீதியில் அமைந்துள்ள லிவர்பூல் கால்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த தொடரில் லிவர்பூல் கழகத்தின் வீரர்களை உள்ளடக்கிய யெலோ, புளூ, ரெட் மற்றும் வைட் ஆகிய நான்கு அணியினர் பங்கேற்றனர்.
புள்ளிகள் அடிப்படையில் நடைபெற்ற இந்த போட்டித்தொடரில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற லிவர்பூல் புளூ அணியும் ரெட் அணியும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடாத்தின.
இறுதிப்போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்று சமநிலை அடைந்ததால் இடம்பெற்ற பெனல்டி உதையில் லிவர்பூல் புளூ அணி 03: 02 கோல்களினால் வெற்றிபெற்று சம்பியனாகியதோடு லிவர்பூல் ரெட் அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
சகல போட்டிகளுக்கும் நடுவராக எம்.எஸ்.எம். நௌபி கடமையாற்றினார். சிறந்த வீரராக முஹம்மது ஆஷிக்கும், சிறந்த கோல் காப்பாளராக பரோஜும் தெரிவாகினர்.
நிகழ்வுக்கு பூரண அனுசரனையை லிவர்பூலின் சகோதர கழகமான ஜுவனைல் கிரிக்கெட் கழகத்தினை வழி நடாத்தும் நுஹா டிம்பர் ஹவுஸ் உரிமையாளர் ரிபாஸ் வழங்கி இருந்தார்.