TAMIL
அடுத்த டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு – விராட் கோலி சூசகம்
* லக்னோவில் நடந்த அணித்தேர்வுக்கான மல்யுத்த தகுதி சுற்று போட்டியில் இளம் வீராங்கனை சோனம் மாலிக் (62 கிலோ), ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக்கை வீழ்த்தினார்.
2 மாதங்களில் 2-வது முறையாக சாக்ஷிக்கு அதிர்ச்சி அளித்துள்ள 18 வயதான சோனம் மாலிக் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் தகுதி
போட்டிக்கான இந்திய அணியில் இடத்தை உறுதிசெய்துள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மார்ச் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இருந்து சீனா, தைவான், ஹாங்காங், மக்காவ், வடகொரியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் விலகியுள்ளன.
கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் இருந்து வேறு இடங்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே இந்த நாடுகள் விலகியுள்ளன.
* ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருவதால் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய துப்பாக்கி சுடுதல் சங்கம் கூறியுள்ளது.
* அடுத்த டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
‘பிரித்வி ஷா இயல்பாகவே அதிரடியாக ஆடக்கூடியவர்.
குறைந்த ரன்கள் எடுப்பதை வைத்து அவரை மதிப்பிட முடியாது.
பெரிய ஸ்கோர் குவிக்கும் திறமை அவருக்கு உண்டு.
அதை எப்படி எடுக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும்.
நியூசிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொள்ள அவருக்கு போதிய வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும்.
ரன் எடுக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு தன்னம்பிக்கை வந்து விடும்’ என்று கோலி குறிப்பிட்டார்.