TAMIL
அடுத்த ஐ.சி.சி. தலைவர் கங்குலி – கிரேமி சுமித் விருப்பம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவின் ஷசாங் மனோகர் இருக்கிறார். அவரது பதவி காலம் விரைவில் முடிவடைகிறது.
இந்த நிலையில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி பொருத்தமானவராக இருப்பார், அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரரும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனருமான கிரேமி சுமித் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுமித் கூறுகையில், ‘கொரோனா தாக்கம் தணிந்த பிறகு ஐ.சி.சி.யை வழிநடத்த வலுவான தலைமை தேவை.
தலைமை பண்புடன் நவீன கால கிரிக்கெட்டுடன் தொடர்புடைய ஒருவர் பொறுப்பு ஏற்க இதுவே சரியான தருணம் ஆகும்.
அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கச்சிதமான தேர்வாக இருப்பார்.
ஐ.சி.சி.யின் தலைவர் பதவி மிகவும் முக்கியமான பதவி.
கிரிக்கெட்டில் நன்கு அனுபவம் உள்ள கங்குலி போன்றவர் தலைவராக இருந்தால் அது கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்லது.
அவர் தொடர்ந்து கிரிக்கெட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றார்.