CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
அடுத்த ஆண்டும் டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை – கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணைய தளத்துக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால், அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு கேப்டனுக்கும், அந்த அணியின் உரிமையாளர்களுக்கும் இடையே புரிதல், நெருக்கமான உறவு, பரஸ்பர மரியாதை உள்ளது. டோனிக்கு அனைத்து விதமான முழு சுதந்திரத்தையும் அணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்.
டோனி தாம் விரும்பும் வரை தொடர்ந்து விளையாடுவார். அடுத்த சீசனில் அவர் கேப்டனாக தொடரும் போது, தற்போதைய அணியை போல் அல்லாமல் மாறுபட்ட அணியை பெற்றிருப்பார். அந்த அணி நிர்வாகம் அளிக்கும் ஆதரவு, நம்பிக்கை காரணமாக டோனியும் மிகவும் விசுவாசமாக இருக்கிறார். சென்னை அணிக்காக கடின உழைப்பு, முயற்சி, வியர்வை, தூக்கமில்லா இரவு என அனைத்தையும் கொடுத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.