TAMIL
அக்டோபர், நவம்பரில் ஐ.பி.எல். போட்டியை நடத்த வாய்ப்பு: இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினர் தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட கமிட்டி உறுப்பினர் அன்ஷூமான் கெய்க்வாட் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது சந்தேகம் தான்.
உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ மட்டுமே ஐ.பி.எல். போட்டி நடக்கும்.
அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும்.
அதுவும் அப்போது இந்தியாவில் எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதை பொறுத்தே முடிவு செய்ய முடியும்.
ஆனால் இப்போதைக்கு ஐ.பி.எல். குறித்து எதுவும் சிந்திக்கவில்லை.