TAMIL
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.
அந்த போட்டிக்கான பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக இருந்து வரும் டேரன் சேமி தலைமையில் அந்த அணி 2017-ம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றியது.
பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று வெளிநாட்டு வீரர்கள் விளையாட தயங்கும் நிலையில் டேரன் சேமி தொடர்ந்து அங்கு விளையாடுவது பிற நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் செல்ல ஊக்கம் அளிப்பதாக அந்த நாடு கருதுகிறது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு சார்பில் டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி, டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறார்.