IPL TAMILTAMIL

வெற்றியோடு தொடங்குமா கொல்கத்தா?

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது.

அதே அபுதாபி மைதானத்தில் மீண்டும் களம் காணுவதால் இந்த முறை ஆடுகளத்தன்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஆடுவதற்கு முயற்சிப்பார்கள்.

முதல் ஆட்டத்தில் சிறந்த தொடக்கம் கிடைத்தும் பின்வரிசையில் தடுமாறி விட்டனர்.

ஆனாலும் பந்து வீச்சு, பேட்டிங்கில் வலுவான அணியாகவே மும்பை அணி தென்படுகிறது.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் அதிரடி வீரர் மோர்கன், எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் அசாத்திய திறன்படைத்த புயல்வேக வீரர் ஆந்த்ரே ரஸ்செல், சுழலில் மிரட்டும் சுனில் நரின், குல்தீப், ரூ.15½ கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா என்று நட்சத்திர வீரர்கள் நிறைய பேர் இருப்பதால் நம்பிக்கையோடு சவாலை தொடங்குகிறது.

இவர்களின் ஆட்டம் ஒருசேர ‘கிளிக்’ ஆனால் அபாயகரமான அணியாக உருவெடுத்து விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

சுப்மான் கில்லும், சுனில் நரினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று நேற்று தெரிவித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், ‘சுப்மான் கில் தரம் வாய்ந்த வீரர். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்பார்ப்பையும் தாண்டி அவர் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். பல்வேறு விதங்களில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருப்பது எங்களது பலமாகும். இந்தியாவைச் சேர்ந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களும் (ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணா) நல்ல நிலையில் உள்ளனர். ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker