CRICKETLATEST UPDATESNEWSTAMIL
விராட் உடன் U19-ல் உலக கோப்பை அணியில் விளையாடிய பேட்ஸ்மேன் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது விராட் கோலி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்றது.
அந்த வெற்றி அணியில் இடம் பிடித்தவர் இடது கை பேட்ஸ்மேன் தான்மே ஸ்ரீவாஸ்தவா. உலக கோப்பை வெற்றிக்குப்பின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் 30 வயதான இடது கை பேட்ஸ்மேனான ஸ்ரீவாஸ்தவா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விராட் கோலி தலைசிறந்த வீரராகியுள்ள நிலையில், அவருடன் விளையாடிய மற்றொரு வீரர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.