TAMIL

வளரும் அணிக்கான ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி

வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி வெற்றியை நோக்கியே பயணித்தது. கடைசி 5 ஓவர்களில் 26 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் இறுதி கட்டத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசி மடக்கினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவை என்ற நிலையில், இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 4 ரன்னே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சன்விர் சிங் 76 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசம் அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.


Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker