CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது: கங்குலி
ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. பின்தொடைப் பகுதியில் (ஹாம்ஸ்டிரிங்) ஏற்பட்ட காயத்தால் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் உள்ளார். பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் உடற்தகுதியை நிரூபித்தால் இந்திய அணியில் இடம் பெற முடியும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மாவுடன் நாங்களும் அவர் ஆஸ்திரேலியா தொடருக்காக உடற்தகுதி பெற வேண்டும் விரும்புகிறோம். ஒரு குறிப்பிட்ட நிலையில் அவர் உடற்தகுதி பெற்றால், அவருக்கான இடம் குறித்து தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்வார்கள். ரோகித் சர்மா மற்றும் ரோகித் சர்மா இருவரையும் கண்காணித்து வருகிறோம். இஷாந்த் சர்மா ஒட்டுமொத்தமாக விலகவில்லை. டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியில் அணியுடன் இணைவார்’’ என்றார்.