![](https://iespnsports.com/wp-content/uploads/2021/04/image_2021-04-29_193952.png)
மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
![குர்ணால் பாண்ட்யா அவுட் ஆன காட்சி குர்ணால் பாண்ட்யா அவுட் ஆன காட்சி](https://img.maalaimalar.com/InlineImage/202104291914136825_1_kurnal._L_styvpf.jpg)
இறுதியில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இது மும்பை அணிக்கு 3-வது வெற்றி ஆகும்.
ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் 2 விக்கெட்டும் முஸ்பிகுர் ரகுமான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.