TAMIL
மைதானத்தில் தமிழர்களின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போன ரிஷப் பாண்ட்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் சென்னை ரசிகர்களின் ஆதரவை கண்டு நெகிழ்ந்து போய்விட்டதாக,
நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று இளம் வீரர் ரிஷப் பாண்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மேற்கிந்திய தீவு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டோனி, இப்போட்டியில் இல்லாததால், இளம் விக்கெட் கீப்பரான
ரிஷப்பாண்டிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், டோனி ரசிகர்கள் சிலர் பேனர் எல்லாம் வைத்திருந்தனர்.
அதுமட்டுமின்றி போட்டிக்கு இடையே ரிஷப் பாண்ட்..ரிஷப் பாண்ட என்று கத்தினர்.
இது குறித்து ரிஷப்பாண்ட் கூறுகையில், நான் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.
ஆனால் கடந்த பல போட்டிகளாக அது முடியாமல் போனது.
தற்போது நான் அதிலிருந்து கற்ற பாடத்தினால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றி வருகிறேன்.
இனி வரும் நாட்களில் நான் சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்.
சென்னையில் எனக்கு கிடைத்த ஆதரவு என்னை நெகிழ வைக்கிறது.
சென்னை ரசிகர்கள் எனக்கு கொடுத்த இந்த ஆதரவிற்கு எனது நன்றியை மனதார தெரிவித்து கொள்கிறேன்.
உண்மையில் இவர்கள் கொடுத்த ஆதரவினால் இன்று மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Rishabh Pant has learned there's no such thing as a 'natural game'#INDvWI pic.twitter.com/YnUhf0Y4NW
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 16, 2019