CRICKETLATEST UPDATESNEWSTAMIL
முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது ஆஸி. பந்து வீச்சால் அல்ல, பிங்க் பந்தால்தான்: அக்தர் சொல்கிறார்
அடிலெய்டு பகல்-இரவு டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் இன்னிங்சில் 53 ரன்கள் முன்னிலைப் பெற்ற போதிலும், 2-வது இன்னிங்சில் 36 ரன்னில் சுருண்டது.
இந்தியா தோற்றதற்கு ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு முக்கிய காரணமல்ல. பிங்க்-பால்தான் முக்கிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘நான் கண்டதில் ஆஸ்திரேலியாவின் பலவீனமான பேட்டிங் ஆர்டர் கொண்ட அணியாக இது உள்ளது. இது மிகவும் உடையக்கூடிய, மிகவும் பலவீனமானது. ஸ்மித்தை நீக்கிவிட்டு மிடில் ஆர்டரை பார்த்தால் மிகவும் மோசம். அவர்களுடைய பந்து வீச்சு சிறப்பானதாக உள்ளது. முதல் போட்டியில் இந்தியா ஏன் தோற்றது என்று என்னிடம் கேட்டால், அதற்கு காரணம் பிங்க்-பால்தான் என்பேன்’’ என்றார்.