சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்கிறது.
இதன்படி கடந்த (மார்ச்) மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும், சிறந்த வீராங்கனைக்கான விருது பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் ரவுத், தென்ஆப்பிரிக்கா வீராங்கனை லிசல் லீ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதில் இருந்து விருதுக்குரிய ஒரு வீரர், வீராங்கனையை முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஐ.சி.சி. வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.