CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பிக் பாஷ் லீக்: மெல்போர்ன் ரெனேகட்ஸ் 60 ரன்னில் சுருண்டு படுதோல்வி
பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் – மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் ஜோஷ் பிலிப் (57 பந்தில் 3 சிக்ஸ், 9 பவுண்டரிகளுடன் 95 ரன்கள்), ஜோர்டான் சில்க் (19 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்) ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மெல்போர்ன் ரெனேகட்ஸ் களம் இறங்கியது. அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் ரெனேகட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 10.4 ஓவர்கள் மட்டுமே தாகுப்பிடித்து 6 ரன்னில் சுருண்டது. இதனால் சிட்னி சிக்சர்ஸ் 165 ரன் வித்தியசத்தில் அபார வெற்றி பெற்றது. பிக் பாஷ் டி20 லீக்கில் மிகவும் அதிக ரன் வித்தியாசத்தில் ஒரு அணி தோல்வி அடைந்தது இதுவே முதல்முறையாகும்.