
நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2020-2021-ம் ஆண்டுக்கான விருதுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சர் ரிச்சர்ட் ஹேட்லி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார். தேவன் கான்வே ஆண்களுக்கான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 251 ரன்கள் விளாசினார். அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராகவும் டபுள் செஞ்சுரி விளாசினார்.