CRICKETLATEST UPDATESNEWSTAMIL
நான் ஒரு ‘நியூ இந்தியா’வின் பிரதிநிதி: விராட் கோலி
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல், விராட் கோலி எல்லாக் காலக்கட்டத்திலும், ஆஸ்திரேலிய அல்லாத ஆஸ்திரேலியர். அதாவது ஆஸ்திரேலிய வீரர்களுக்கான அனைத்து பண்புகளையும் கொண்டவர்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புவதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என்னுடைய ஆளுமை மற்றும் கேரக்டர் வகையில் நான் ஒரு நியூ இந்தியாவின் பிரதிநிதி. என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான் பார்க்கிறேன்.
என்னுடைய மனநிலையை ஆஸ்திரேலிய நாட்டினர் மனநிலையுடன் ஒப்பிட இயலாது. இந்திய கிரிக்கெட் அணியாக நாங்கள் எழுந்து நிற்கத் தொடங்கியதும் எனது ஆளுமை முதல் நாளிலிருந்தே இருந்து அப்படியே இருந்தது.
புதிய இந்தியா சவால்களை எடுத்துக்கொள்கிறது மற்றும் நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆகியவற்றால் நிறைந்துள்ளது. எங்கள் வழியில் வரும் எந்த சவால்களுக்கும் நாங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்கிறோம்’’ என்றார்.