IPL TAMILTAMIL

தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த 12ம் வகுப்பு மாணவர் கைது

ஐ.பி.எல் கிரிக்கெட் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.

பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.

தோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர், தோனி, சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிடப்பட்டது.

இதுகுறித்து ராஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரைத்து வந்தனர்.

தோனியின் மைனர் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்” என்று கட்ச் (மேற்கு) காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் கட்ச் மாவட்டத்தில் முந்த்ராவைச் சேர்ந்தவர் என்று ராஞ்சி போலீசார் எங்களுக்குத் தெரிவித்ததையடுத்து நாங்கள் அவரை விசாரித்தோம்.

அந்தச் செய்தியை வெளியிட்டவர் சிறுவன் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அந்த நகரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஞ்சி போலீசில் ஒப்படைக்கப்படுவார் என்று அகமதாபாது போலீசார் தெரிவித்தனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker