TAMIL
டி20 மற்றும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக முறையே டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் இந்தியா விளையாடுகிறது.
இதன்படி, இலங்கைக்கு எதிராக 3 சர்வதேச டி20 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.
சர்வதேச டி20 முதல் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது.
இதனை அடுத்து வருகிற ஜனவரி 14-ந் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு பற்றி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த 5 பேர் கொண்ட குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கைக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்தியா அணி
விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, வாஷிங்டன் சுந்தர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, யஸ்வேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சாமி.