TAMIL
கொல்கத்தா அணியில் இருந்து கிறிஸ் லின்னை விடுவிடுத்தது மோசமான முடிவு- யுவராஜ்சிங் கருத்து
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19–ந் தேதி நடக்கிறது. கடந்த வாரம் வீரர்கள் பரிமாற்றம் முடிவடைந்தது. இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது.
இந்த நிலையில்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து கிறிஸ் லின்னை நீக்கம் செய்து இருப்பது தவறான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.