TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 10-வது வெற்றி
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 74-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.
இதில் அதிரடியாக ஆடிய கோவா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 10-வது வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலம் எப்.சி.கோவா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 75-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொள்கிறது.