CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது சூர்யகுமார் யாதவுக்கு ஏமாற்றம் அளிக்கும்- போல்லார்ட் சொல்கிறார்
பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 79 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதுகுறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் போல்லார்ட் கூறியதாவது:-
தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு ஒருவர் நிலைத்து நின்று ஆடியதை நினைத்துப் பாருங்கள். அதுபோன்ற மந்தமான நிலையில் யாராவது ஒருவர் எப்போது இப்படி நிலைத்து நின்று விளையாடுகிறார்களா?.
சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப் படாததற்கு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார். அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் ஒரு தனி நபராக நீங்கள் தொடர்ந்து நிலைத்திருந்தால் உங்களுக்கு வெகுமதி கிடைக்கும். எதுவும் அதன் காலத்துக்கு முன்பு நடக்காது.
நான் டிவில்லியர்சுக்கு பந்து வீச முடிவு செய்தேன். கடைசி ஓவருக்காக நான் காத்திருந்திருக்கலாம். ஆனால் யாராவது அதிக ரன்களை கொடுக்க வேண்டி இருந்தால் அது நானாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு பந்து வீசினேன்.
இந்த போட்டித்தொடரில் பும்ரா தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நாங்கள் மீண்டும் ஒரு அணியாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம் என்றார்.