CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இத்தனை கேட்சா மிஸ் செய்வது: இறுதியில் லாபஸ்சேன்-ஐ எல்.பி.டபிள்யூ மூலம் வீழ்த்திய உமேஷ் யாதவ்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 244 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, அஸ்வின் ஆகியோர் அபாரமாக பந்து வீசினார்.

15-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேத்யூ வடே 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான லாபஸ்சேன் களம் இறங்கினார். முதல் இரண்டு பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்து பேட் விளம்பில் பட்டு விக்கெட் கீப்பருக்கும் முதல் ஸ்லிப்பிற்கும் இடையே பறந்தது. சாஹா டைவ் அடித்தார். ஆனால் பந்து கையில் படவில்லை. ஏறக்குறைய இது கேட்ச் மிஸ்தான். இதை பிடித்திருந்தால் லாபஸ்சேன் டக்அவுட்டில் சென்றிருப்பார்.

18-வது ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை லெக்சைடில் தூக்கி அடித்தார். பும்ரா பவுண்டரி லைனில் பிடிக்க முயன்றார். எளிதாக பிடிக்க முயன்ற கேட்ச்-ஐ பவுண்டரி லைனை தாண்டிவிடுவோமா என தவறாக நினைத்து கோட்டை விட்டார். இதனால் 12 ரன்னில் மீண்டும் ஒருமுறை லாபஸ்சேன் தப்பினார்.

23-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை லெக் சைடு தூக்கி அடிக்க முயன்றார். பந்து பிரித்வி ஷா கைக்கு சென்றது. ஆனால் பிரித்வி ஷா எளிதாக பிடிக்க வேண்டியதை கோட்டை விட்டார். இதனால் 3-வது முறையாக 21 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

இதற்கிடையே ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ, ஆனார். இவர்தான் ஆஸ்திரேலியா அணியில் முதல் 6 பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் அடித்தார். முதலிலேயே ஆட்டமிழந்திருந்தால் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருந்திருக்கும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker