TAMIL
இதுவரை நடக்காத புதிய உலக சாதனை! இந்தியா பங்கேற்ற முதல் டி20 போட்டியில் நடந்த சுவாரசியங்கள்
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளன.
ஆக்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் நடந்திராத ஒரு முக்கிய சாதனை ஆகும்.
மூன்று நியூசிலாந்து வீரர்களும், இரண்டு இந்திய வீரர்களும் அரைசதம் கடந்தனர். இதுவரை சர்வதேச டி20 போட்டி ஒன்றில் ஐந்து அரைசதங்கள் அடிக்கப்பட்டதில்லை.
அந்த அரிய சாதனையை பதிவு செய்தது இந்தியா – நியூசிலாந்து இடையே ஆன முதல் போட்டி.
மேலும், இந்த போட்டியில் தன் மூன்றாவது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்கை பதிவு செய்தது இந்திய அணி.
இதற்கு முன் இலங்கை (207 ரன்கள்), வெஸ்ட் இண்டீஸ் (208 ரன்கள்) அணிகளுக்கு எதிராக தன் முதல் இரண்டு அதிகபட்ச சேஸிங்கை கொண்டுள்ளது இந்திய அணி.
இந்திய அணி மட்டுமே உலக அரங்கில் இதுவரை நான்கு 200க்கும் அதிகமான ரன் சேஸிங்கை செய்துள்ளது.
அடுத்த இடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியா இரண்டு முறை 200க்கும் அதிகமான இலக்கை சேஸிங் செய்துள்ளது.