CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸி.க்கு எதிரான முதல் டி20- விரைவில் விக்கெட்டை இழந்த கோலி, தவான்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த இந்திய அணி கான்பெர்ராவில் நடந்த கடைசி ஒரு நாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த வெற்றி இந்தியாவின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. இந்த உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் 20 ஓவர் போட்டியில் களமிறங்கி உள்ளனர்.
இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளார். போட்டி தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு டி20 அறிமுக தொப்பியை ஜஸ்பிரித் பும்ரா வழங்கினார்.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். தவான் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, கேப்டன் கோலி 9 ரன்கள் மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் பந்துகளை அடித்து ஆடிய கே.எல்.ராகுல் அரை சதத்தை நெருங்கினார்.