எந்த அணியும் அதனுடைய சொந்த மைதானத்தில் விளையாடவில்லை. பொதுவான மைதானத்தில் விளையாடுகிறது.
ஆர்சிபி முதல் மூன்று போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டும்.
2008-ல் அனில் கும்ப்ளே தலைமையிலான அணி சிஎஸ்கே-வை 14 ரன்னில் வீழ்த்தியிருந்தது, அதன்பின் வெற்றி பெற்றதே கிடையாது. முதல் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதால், ஆர்சிபி ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.
ஆனால் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஆர்சிபி வருகிற 14-ந்தேதி ஐதராபாத்தையும், 18-ந்தேதி கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.