TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ; இந்திய அணி தடுமாற்றம்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் உள்ள பாசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.



இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கியது.

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் களம் இறங்கினர்.

இந்திய அணி துவக்கம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது.

பிரித்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய புஜாரா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.



நட்சத்திர வீரரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது.

துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 29 ரன்களிலும், ரகானே 2 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில், ஜேமிசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker