TAMIL

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஸ்பெயின் அணி ‘சாம்பியன்’

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் 18 அணிகள் கலந்து கொண்டு மோதின. இதில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஒற்றையர் பிரிவில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் 19 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் அஜிரை தோற்கடித்தார். அடுத்து நடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவாலோவை (கனடா) வீழ்த்தினார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஸ்பெயின் அணி ஏற்கனவே 2000, 2004, 2008, 2009, 2011-ம் ஆண்டுகளில் இந்த கோப்பையை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.



Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker